சோகமான படங்களில் நடிக்க மாட்டேன்: தமன்னா பேட்டி

Bookmark and Share

சோகமான படங்களில் நடிக்க மாட்டேன்: தமன்னா பேட்டி

‘‘படங்கள் பார்ப்பதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருக்கும். சிலருக்கு நடுங்க வைக்கிற மாதிரி திகில் பேய் படங்கள் பிடிக்கும். சிலருக்கு அதுபோன்ற படங்களை பிடிக்காது. காதல் கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அழ வைக்கிற மாதிரியான சோக படங்களை விரும்புகிறவர்களும் உண்டு.

ஆனால் எனக்கு அழுகை படங்களை சுத்தமாக பிடிக்காது. அப்படிப்பட்ட படங்களை பார்க்க யாரேனும் அழைத்தால் ஓடிப்போய் விடுவேன். இது போன்ற படங்களில் நடித்தால்தான் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த முடியும் என்று சொல்கின்றனர். அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த படங்களை பார்க்க எனக்கு பிடிக்காது.

ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கத்தான் காசு கொடுத்து தியேட்டருக்கு படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் படங்களை காட்டி ஏன் அழ வைக்க வேண்டும். அழ வைக்கிற சோக படங்களில் நடிக்க கொஞ்சம் கூட எனக்கு விருப்பம் இல்லை. சோகமான படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன்.

வேறு வழியில்லாமல் அதுமாதிரி படத்தில் நடிக்க வேண்டி வந்தாலும் அதில் நடிப்பதோடு சரி. அந்த படத்தை நான் பார்க்க மாட்டேன். இதுவரை ஜாலியான படங்களில்தான் நான் நடித்து இருக்கிறேன். அதுபோன்ற படங்களில்தான் தொடர்ந்து நடிப்பேன்.’’

இவ்வாறு தமன்னா கூறினார்.


Post your comment





Related News
சிம்புவுக்கு ஜோடியான தமன்னா
நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!
பேசுவதற்கு முன்பு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் – தமன்னா ஆவேசம்!
கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா பேட்டி
அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா
தமன்னாக்கு அண்ணனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்!
மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!
பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது
திறமை இருந்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் வரும் : தமன்னா பேட்டி
தோழா தெலுங்கு டப்பிங் பணிகளை முடித்த தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions