கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா பேட்டி

Bookmark and Share

கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா பேட்டி

“நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம். அதே நேரம் கவர்ச்சியை மட்டுமே வைத்து சினிமாவில் நிலைக்க முடியும் என்று கருதினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

கவர்ச்சியும், நடிப்பு திறமையும் இருந்தால்தான் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள முடியும். சினிமாவில் முந்தைய காலங்களில் எளிதாக நுழைய முடியாது. இப்போது அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் வரலாம்.

முதல் படத்தில்தான் அவர்களால் கஷ்டம் இல்லாமல் அறிமுகமாக முடியும். தொடர்ந்து பட வாய்ப்புகள் வர வேண்டுமானால் திறமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓரம் கட்டி விடுவார்கள். சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் போராட வேண்டும். நான் சினிமாவுக்கு வந்து பல நடிகர்களுடன் நடித்து விட்டேன். மூத்த கதாநாயகர்கள், இளம் நாயகர்கள் ஜோடியாக நடித்து இருக்கிறேன். அவர்களுடன் இதுவரை எந்த கருத்து வேறுபாடோ, கசப்பான அனுபவங்களோ ஏற்பட்டது இல்லை.

எல்லோரும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறார்கள். தாங்கள் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்கள் நஷ்டப்படக்கூடாது என்ற அக்கறை எல்லா நடிகர், நடிகைகளுக்கும் இருக்கிறது. இதற்காக படம் திரைக்கு வந்து நன்றாக ஓடுவது வரை உழைக்கிறார்கள்.

முந்தைய காலங்களில் இதுபோன்று இல்லை. படத்தில் நடித்து சம்பளம் வாங்கியதோடு அடுத்த வேலைக்கு போய்விடுவார்கள். இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டு படத்தை வெற்றி பெற வைக்க இணைந்து பணி செய்கிறார்கள். சினிமாவில் மொழி பேதம் கிடையாது. நான் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்தி படங்களுக்கு உலக அளவில் மார்க்கெட் இருக்கிறது. தெலுங்கில் கமர்சியல் படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழில் புதுமையாகவும், வித்தியாசமான கதையம்சங்களுடனும் படங்கள் வருகின்றன.

இவ்வாறு தமன்னா கூறினார்.


Post your comment





Related News
சிம்புவுக்கு ஜோடியான தமன்னா
நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!
பேசுவதற்கு முன்பு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் – தமன்னா ஆவேசம்!
அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா
தமன்னாக்கு அண்ணனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்!
சோகமான படங்களில் நடிக்க மாட்டேன்: தமன்னா பேட்டி
மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!
பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது
திறமை இருந்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் வரும் : தமன்னா பேட்டி
தோழா தெலுங்கு டப்பிங் பணிகளை முடித்த தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions