சினிமாவில் தினமும் புதிய அனுபவங்கள் கிடைக்கிறது: தமன்னா பேட்டி

Bookmark and Share

சினிமாவில் தினமும் புதிய அனுபவங்கள் கிடைக்கிறது: தமன்னா பேட்டி

தமன்னா நடித்து கடந்த வருடம் 4 படங்கள் வெளி வந்தன. அவற்றில் ‘பாகுபலி’ முக்கிய படமாக அமைந்தது. அதில் போராளி பெண்ணாக வந்தார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டினார். தற்போது தமிழ், தெலுங்கில் 3 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- 

‘‘நான் நடிகையானதில் சந்தோஷப்படுகிறேன். சினிமாவில் தினமும் புதிய அனுபவங்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைகின்றன. ‘பாகுபலி’ படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். கஷ்டப்பட்டு அதில் நடித்தேன். ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைத்தன. 

தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இதனால்தான் சினிமாவில் நிலைத்து இருக்க முடிகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. கடவுள் அருளால்தான் சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். எனக்கு பிடித்த கடவுள் சித்தி விநாயகர். 

ஒவ்வொரு நாளும் விநாயகரை வணங்கி விட்டுத்தான் வேலைகளை தொடங்குகிறேன். எனக்கு பேராசைகள் கிடையாது. இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த வாழ்க்கை நிலைத்து இருந்தால் போதுமானது.

கடவுள் நேரில் வந்தால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு வேண்டியதை கேட்பார்கள். ஆனால் நான் எதுவும் கேட்க மாட்டேன். கடவுள் எனக்கு ஏற்கனவே அளவுக்கு மீறி நிறைய கொடுத்து விட்டார். எனவே கடவுளை நேரில் பார்த்தால் அவருக்கு நன்றி மட்டுமே சொல்வேன்.’’ 

இவ்வாறு தமன்னா கூறினார்.


Post your comment





Related News
சிம்புவுக்கு ஜோடியான தமன்னா
நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!
பேசுவதற்கு முன்பு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் – தமன்னா ஆவேசம்!
கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா பேட்டி
அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா
தமன்னாக்கு அண்ணனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்!
சோகமான படங்களில் நடிக்க மாட்டேன்: தமன்னா பேட்டி
மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!
பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது
திறமை இருந்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் வரும் : தமன்னா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions