திறமை இருந்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் வரும் : தமன்னா பேட்டி

Bookmark and Share

திறமை இருந்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் வரும் : தமன்னா பேட்டி

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படம் இவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தி இருக்கிறது.

சம்பளத்தையும் கூட்டி உள்ளார். சினிமாவில் அறிமுகமான போது தனக்கு தோல்வி படங்களாகவே அமைந்தன என்றும், அதை மீறி தனது திறமையால் உயர்ந்தேன் என்றும் தமன்னா கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘சினிமாவில் வெற்றி படம் கொடுத்தால் எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள் என்றும், பட வாய்ப்புகள் குவியும் என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால் அது தவறு.

ஒரு வெற்றி படம் கொடுத்தால் எவரும் தூக்கி வைத்து கொண்டாட மாட்டார்கள். அடுத்த வாய்ப்புக்காக போராடத்தான் வேண்டும். நிறைய நடிகர்கள் இதுபோல் ஒரு படத்தை வெற்றி படமாக கொடுத்துவிட்டு வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள்.

திறமை தான் முக்கியம். திறமை இருந்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் வரும். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் படங்கள் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு ஒரே ஒரு படம் வெற்றி பெற்றது. அந்த படத்தை வைத்து எனக்கு வாய்ப்புகள் வரவில்லை. ‘ஹேப்பி டேஸ்’ என்ற தெலுங்கு படம் நன்றாக ஓடியது. அதன்பிறகு வந்த படங்கள் தோல்வியடைந்தன.

ஆனாலும், நான் ஒரு நடிகையாக இப்போதும் நிலைத்து இருப்பதற்கு காரணம் எனது திறமை தான். படங்கள் தோல்வியடைந்தாலும் எனக்கு திறமை இருக்கிறது என்பதை இயக்குனர்கள் அடையாளம் கண்டுகொண்டு வாய்ப்புகள் தொடர்ந்து தருகிறார்கள்.

இதனால் தான் தோல்வி கொடுத்தாலும், எனக்கு படங்கள் வருகிறது. எனவே வெற்றி தோல்வியை பற்றி நடிகர்கள் கவலைப்பட கூடாது. திறமை இருந்தால் சினிமாவில் நிரந்தரமாக நிலைத்து இருக்கலாம்.’’

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
சிம்புவுக்கு ஜோடியான தமன்னா
நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!
பேசுவதற்கு முன்பு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் – தமன்னா ஆவேசம்!
கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா பேட்டி
அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா
தமன்னாக்கு அண்ணனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்!
சோகமான படங்களில் நடிக்க மாட்டேன்: தமன்னா பேட்டி
மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!
பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது
தோழா தெலுங்கு டப்பிங் பணிகளை முடித்த தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions