திறமையான நாயகிகளை பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா பேட்டி

Bookmark and Share

திறமையான நாயகிகளை பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா பேட்டி

நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- 

‘‘மனதில் இருப்பதை யாராலும் மறைக்க முடியாது. ஒருவருக்கு கஷ்டம் வந்தால் அவரால் சிரிக்க முடியாது. எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாது.

என்ன நினைக்கிறேனோ அதை முகம் காட்டி கொடுத்து விடும். நாம் போட்டி உலகத்தில் இருக்கிறோம். தினம் தினம் ஒவ்வொரு துறையிலும் திறமையானவர்கள், புத்திசாலிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு அவர்கள் முன்னுக்கு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் ஒவ்வொருவர் மனதிலும் பாதுகாப்பு இல்லாத உணர்வு புகுந்து ஆட்டிப் படைக்கிறது. இந்த தொழிலில் நிலைப்போமா? என்று சந்தேகப்பட்டு நிலைகுலைகிறார்கள். சினிமாவில் அழகான, திறமையான நடிகைகளை பார்க்கும்போது பொறாமை வருகிறது. அவர்கள் நடித்த படங்கள் வெற்றி பெறும்போது அந்த படத்தில் நடிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்ற வருத்தம் வருகிறது.

இதுபோன்ற மனநிலைகள் மனதில் குழப்பம், சஞ்சலத்தை ஏற்படுத்தி நிம்மதியை கெடுத்து விடும். இதில் இருந்து விடுபட வேண்டுமானால் போட்டி, பொறாமை உணர்வுகளை மனதில் இருந்து துடைத்து எறிய வேண்டும். நான் அந்த உணர்வுகளில் இருந்து விடுபட்டு விட்டேன். சினிமாவில் ஒரு நடிகையை விட அழகான திறமையான நடிகைகள் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்கள் திறமையை ஏற்றுக்கொண்டு கவுரவிக்க வேண்டும்.

அதற்கு மனதை தயார்படுத்த வேண்டும். அப்படி இருந்தால்தான் சினிமாவில் சிநேகிதிகளை சம்பாதிக்க முடியும். நான் திறமையான நடிகைகளை பாராட்ட தயங்க மாட்டேன். என்னை விட திறமையாக நடித்து இருந்தால் அவர்கள் மீது பொறாமைப்படாமல் போன் செய்து வாழ்த்துவேன். இதனால் எப்போதும் நான் சந்தோஷமாக இருக்கிறேன். தோழிகளும் நிறைய பேர் சேர்ந்து இருக்கிறார்கள்.

இவ்வாறு தமன்னா கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions