
நடிப்பதோடு மட்டும் அல்லாமல் மற்ற வர்த்தகத்திலும் ஈடுபடுவதும் சில திரைப்படக் கலைஞர்கள் வழக்கம். திரையுலகத்தில் மார்க்கெட் என்பது சிலருக்குத்தான் நீண்ட நெடுங்காலமாக இருக்கும், பலருக்கோ ஒரு சில ஆண்டுகள்தான் நிலைக்கும்.
அதிலும், இப்போதெல்லாம் நாளுக்கு ஒரு புதுமுகம் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பழைய நடிகர்களைப் புதிய படங்களில் பார்ப்பதே அரிதாக உள்ளது. அதனால்தான் பலரும் வேறு வேறு வியாபாரங்களையும் பார்த்து வருகிறார்கள்.
பொதுவாக, நடிகைகள் என்றால் ஆடை அலங்காரம், புடவை கடை, ஃபேஷன் போன்ற வர்த்தகத்தில் ஈடுபவடுவதுதான் அதிகமாக இருக்கும். அந்தக் கால நடிகைகள் பலரும் சொந்தமாக ஃபேஷன் துணிக் கடைகளை நடத்தி வருகிறார்கள்.
சில நடிகைகள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சிலர் வேறு வியாபார நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா சொந்தமாக நகை வியாபாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளாராம்.
'ஒயிட் அண்ட் கோல்ட்' என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து விற்கும் தொழிலை சமீபத்தில்தான் துவக்கியுள்ளாராம். இந்த டிசைனிங்கில் இந்தியாவின் சில முன்னணி டிசைனர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.
தனது சொந்த வடிவமைப்பையும் தமன்னா செய்ய உள்ளாராம். பரவாயில்லை, எப்போது மார்க்கெட் போனாலும் தமன்னாவுக்கு ஜுவல்லரி மார்க்கெட் இருக்கவே இருக்கிறது. ஆக, நடித்தாலும், நடிக்கவில்லையென்றாலும் தமன்னா ஜொலித்துக் கொண்டேயிருப்பார்.
Post your comment
Related News | |
▪ | திறமையான நாயகிகளை பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா பேட்டி |
▪ | ஆர்யாவை ரன் அவுட் செய்த தமன்னா! |
▪ | கார்த்தி ஜோடியாக மீண்டும் தமன்னா...? |
![]() |