நான் ஆண் கவிஞர்களை விட ஒருபடி மேல்!

Bookmark and Share

நான் ஆண் கவிஞர்களை விட ஒருபடி மேல்!

'ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ; அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல'- 'என்னை அறிந்தால்' திரைப்படப் பாடல்கள் வெளியான புதிதில், பெரும்பாலானவர்களின் 'முகநூல்' நிலைப்பதிவில் ஜொலித்த வரிகள் இவை! தாமரையிலிருந்து பூத்த மற்றொரு மென்மையான வரிகள்! தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக காலுான்றி நிற்கும் ஒரே பெண் பாடலாசிரியர்; 'படைப்பாளி' என்ற பட்டத்தை தாண்டி, திரைத்துறையில் ஓர் ஆளுமையாக திகழ்பவர்.

அதுவரை, ஆணின் வழக்கமான பார்வையிலேயே வழங்கப்பட்டு வந்த பெண்ணின் உணர்வுகளுக்கு, புத்துணர்வு கொடுத்தது, இவரின் 'வசீகரா...', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்...', 'மன்னிப்பாயா...', 'இதயத்தை ஏதோ ஒன்று...' போன்ற பாடல் வரிகள்.

சமீபகாலமாக ஊடகப் பார்வையிலிருந்து சற்றே விலகி இருந்தவர், நமக்களித்த பேட்டியில் உதிர்ந்த வார்த்தைகள் அனைத்தும் தன்னம்பிக்கை வரிகள்!ஓர் ஆணின் பார்வையில் பெண்மையை நீங்கள் வர்ணித்து எழுதும் பாடல்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது. என்ன ரகசியம்?எந்த மனநிலையோடும் தன்னை பொருத்திப் பார்த்து கொள்பவர்தான் முழுமையான படைப்பாளி.

ஒரு எழுத்தாளர் கதை எழுதும்போது, எத்தனையோ  கதாபாத்திரங்களின் கோணங்களில் சிந்தித்து எழுதுகிறார். ஒரு பெண் பாடல் எழுதுவது திரைப்படத்துறைக்கு புதிது. அதனால், நான் தனித்து கவனிக்கப்படுகிறேன். உங்களுக்குப் பின், தமிழ் சினிமாவுக்கு பெண் பாடலாசிரியர்கள் பெரியதாக உருவாகவில்லையே... என் 18 ஆண்டு பயணத்தில் அவர்களுக்கு என்று ஒரு பாதையை, நான் அமைத்திருக்கிறேன்.

தற்போதுள்ள பெண்கள் மிகவும் துணிச்சலாக திரைத்துறையில் நுழைகிறார்கள். ஆனால், இதில் நிலைத்து நிற்க, மூன்று கூறுகள் அவசியம்! ஒன்று, பாடல் எழுதும் திறன். மற்றொன்று, தன்னை சுற்றியுள்ள சூழலை சரியாக நிர்வகிக்கும் திறமை. மூன்றாவது, வித்தியாசமான படைப்புகளை படைக்க வேண்டிய கட்டாயம். ஆனால், பாடல் எழுதுவதை விடுத்து, இத்துறையின் ஆடம்பரங்களில் மயங்காமல் இருப்பது அவசியம்!ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும், தான் மட்டுமே எழுதவேண்டும் என்று, சில பாடலாசிரியர்கள் அடம்பிடிக்கிறார்களே... இதில் தவறொன்றுமில்லை! ஆனால், அதை எவ்வளவு சிறப்பாக செய்கிறார்கள் என்பதை மட்டும்தான் கவனிக்க வேண்டும்.

இங்கு, ஒரு ஆண் படைப்பாளியையும், பெண் படைப்பாளியையும் ஒப்பிடவே முடியாது. ஒரு சராசரி பெண்ணின் குடும்பச் சுமைகளுக்கு இடையில்தான், நான் என் ஒவ்வொரு படைப்புகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இத்தகைய சூழலில், ஆண் கவிஞர்களை நான்கு பாடல்கள் எழுத சொல்லுங்கள் பார்க்கலாம்; திணறிவிடுவார்கள்! அந்தவகையில், நான் அவர்களைவிட ஒருபடி மேல்தான்!சமீபத்தில், மதன் கார்க்கி எடுத்துள்ள 'லிரிக் இன்ஜினியரிங்' என்ற புதுமுயற்சி பற்றி? பாடல் எழுதுவதற்கு, ஒவ்வொருவரும் ஒரு உத்தியைப் பயன்படுத்துவார்கள். அவருக்கு கணினி தொழில்நுட்பம் மிகவும் பரிட்சயம் என்பதால், அதில் ஒரு புது உத்தியை கையாளுகிறார்.

சிறப்பாகவும் செய்து வருகிறார். சமூக ஆர்வலரான தாமரை, தற்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?தமிழ் மொழியும், தமிழினமும் இழந்த பெருமைகளை மீட்டெடுப்பதுதான் என் கனவு. இதைத்தான், என் முந்தைய பணிகளில் பிரதிபலித்திருக்கிறேன். என் வீட்டு சுமை காரணமாக, சமூக பணிகளில் ஈடுபட நேரம் கிடைக்கவில்லை.

ஆனால், என் பாடல் வரிகளில் ஆங்கில வார்த்தைகளை சேர்க்காதது; ஆபாசம், இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தாதது என்று, நான் கொண்டுள்ள கொள்கைகளே, அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. மேலும், என்னுடையது மனித உரிமை சார்ந்த அரசியல். நான் பதவி சார்ந்த அரசியலில் ஒருபோதும் இயங்கமாட்டேன்!

உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது என்னவாக இருக்கும்? நான் இதுவரை 500 பாடல்கள் எழுதியிருக்கிறேன். இன்னும் 10 ஆண்டுகளில், இன்னும் 500 பாடல்களை எழுதுவேன் என்று நினைக்கிறேன். உலக வரலாற்றிலேயே தொழில்முறையில், 1,000 பாடல்கள் எழுதிய பெண் பாடலாசிரியர்கள் யாருமில்லை. அப்படி ஒரு சாதனையை செய்யவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு.


Post your comment

Related News
சிம்பு, அனிருத் பீப் பாடலுக்கு கவிஞர் தாமரை கண்டனம்!
கவிஞர் தாமரைக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கவலைகள் மறந்தார், பணிகளை தொடர்ந்தார் தாமரை
பேஸ்புக்கில் அவதூறு செய்கிறார்கள்: தாமரையின் கணவர் போலீசில் புகார்
கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றது
ஆறாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
மாணவர்கள் கூட்டமைப்புடன் கவிஞர் தாமரை இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்
ஐந்தாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
கவிஞர் தாமரைக்கு ஒரு வேண்டுகோள்...!
நான்காவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions