பேஸ்புக்கில் அவதூறு செய்கிறார்கள்: தாமரையின் கணவர் போலீசில் புகார்

Bookmark and Share

பேஸ்புக்கில் அவதூறு செய்கிறார்கள்: தாமரையின் கணவர் போலீசில் புகார்

பாடலாசிரியர் தாமரையின் கணவர் தியாகு. தாமரையும், தியாகுவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாமரை கணவர் வீட்டைவிட்டு  சொல்லாமல் ஓடிவிட்டார் அவருடன் சேர்த்து வையுங்கள் என்று தொடர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

பின்னர் தியாகுவே நேரடியா வந்து மன்னிப்பு கேட்டதும் தர்ணா போராட்டத்தை  வாபஸ் பெற்றார். 60 வயதை தாண்டிய தியாகுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தாமரை குற்றம் சாட்டியிருந்தார்.

இதையொட்டி டுவிட்டர் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தாமரைக்கு ஆதரவாகவும் தியாகுவை விமர்சித்தும் கமெண்டுகள் குவிந்து வருகிறது. இதில் சில தியாகுவை கடுமையாக விமர்சிக்கிறது.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 23)  தியாகு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தார். தன்னை பற்றி சமூக வளைத்தளங்களில் அவதூறாக செய்திகளை வெளியிடுகிறார்கள்.

அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த மனு மீது சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post your comment





Related News
சிம்பு, அனிருத் பீப் பாடலுக்கு கவிஞர் தாமரை கண்டனம்!
கவிஞர் தாமரைக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கவலைகள் மறந்தார், பணிகளை தொடர்ந்தார் தாமரை
கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றது
ஆறாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
மாணவர்கள் கூட்டமைப்புடன் கவிஞர் தாமரை இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்
ஐந்தாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
கவிஞர் தாமரைக்கு ஒரு வேண்டுகோள்...!
நான்காவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
இரண்டாவது நாளும் தொடரும் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions