கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கவிஞர் தாமரை திடீர் தர்ணா!

Bookmark and Share

கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கவிஞர் தாமரை திடீர் தர்ணா!

தமிழ் சினிமாவின் பிரபல பெண் கவிஞர் தாமரை. இயக்குநர் சீமானால், 'இனியவளே' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தாமரை, பின்னாளில் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானார்.

குறிப்பாக கௌதம் மேனனின், 'மின்னலே' தொடங்கி, 'என்னை அறிந்தால்' வரை அனைத்து படங்களிலும் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.  கவிஞர் தாமரையின் கணவர், சில மாதங்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து எங்கோ சென்றுவிட்டார்.

இந்நிலையில், தன்னையும் தன்மகனையும் தவிக்க விட்டு சென்று தலைமறைவாக இருக்கும், தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கி இருக்கிறார் தாமரை.

சென்னை, சூளைமேடு, பெரியார் பாதை அருகே தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார். தாமரையின் இந்த திடீர் தர்ணா போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
சிம்பு, அனிருத் பீப் பாடலுக்கு கவிஞர் தாமரை கண்டனம்!
கவிஞர் தாமரைக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கவலைகள் மறந்தார், பணிகளை தொடர்ந்தார் தாமரை
பேஸ்புக்கில் அவதூறு செய்கிறார்கள்: தாமரையின் கணவர் போலீசில் புகார்
கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றது
ஆறாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
மாணவர்கள் கூட்டமைப்புடன் கவிஞர் தாமரை இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்
ஐந்தாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
கவிஞர் தாமரைக்கு ஒரு வேண்டுகோள்...!
நான்காவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions