பில்டப் கொடுக்கும் தம்பி ராமைய்யா!

Bookmark and Share

பில்டப் கொடுக்கும் தம்பி ராமைய்யா!

மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமைய்யா. ஆனால் இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றியை கொடுக்காததால் முழுநேர நடிகராகி விட்டார்.

அப்படி நடித்த மைனா படம் தேசிய விருது பெற்றுக்கொடுத்ததால் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகராகி விட்டார் அவர். இந்த நிலையில், தனது மகன் உமாபதியை வைத்து ஒரு கூடை முத்தம் என்ற படத்தையும் இயக்கினார்.

ஆனால் படம் பாதியிலேயே நின்றுபோனது. இருப்பினும், 5 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் மீண்டும் மகனை ஹீரோவாக்கியிருக்கிறார் தம்பிராமைய்யா. ஆனால் தான் அந்த படத்தை இயக்கினால் தனது நடிப்பு மார்க்கெட் பாதிக்கும் என்பதால் வேறொருவரை அந்த படத்தை இயக்க வைத்திருக்கிறார்.

மேலும், யாராவது தனது மகன் நடிக்கும் படத்தைப்பற்றி கேட்டால், அந்த படம் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று செம பில்டப் கொடுக்கிறாராம்.

இதனால் அவரது மகனுக்காக கதை சொல்லச்செல்லும் இயக்குனர்கள், முதல் படத்திலேயே இவ்வளவு பட்ஜெட்டில் நடித்தால் அடுத்த படத்தை இன்னும் அதிகப்படியான பட்ஜெட்டில் தயாரிக்க சொல்வார்களே என்று பயந்து திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions