தம்பி ராமைய்யாவின் மகன் நடிக்கும் தண்ணி வண்டி!

Bookmark and Share

தம்பி ராமைய்யாவின் மகன் நடிக்கும் தண்ணி வண்டி!

மைனா படத்தில் நடித்து சிறந்த குணசித்ர நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் தம்பி ராமைய்யா. இவர் மறைந்த நடிகர் முரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடிப்பில் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அதன்பிறகு அவர் இயக்கிய ஒரு கூடை முத்தம் என்ற படம் கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில், தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் அவர், தனது மகன் உமாபதியை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

அப்போது தம்பி ராமைய்யாவை தொடர்பு கொண்டு அதுபற்றி விசாரித்தபோது, நடிப்பு நல்லா போய்க்கிட்டிருக்கு. அதனால் மீண்டும் படம் இயக்கும் ஐடியாவே என்னிடத்தில் இல்லை என்று தெரிவித்தார். அதோடு தனது மகன் நடிக்கும் படம் பற்றிய விவரங்களையும் அவர் சொல்ல தயங்கினார்.

ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவரது மகன் உமாபதி நடிக்கும் தண்ணி வண்டி என்ற படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. புதுமுக டைரக்டர் ஒருவர் இயக்கும் இந்த படத்தின் கமர்சியல் கருதி தம்பி ராமைய்யாவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம்.

அதாவது, சில வருடங்களுக்கு முன்பு அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த உ படத்திற்கு நிகராக மகனை தூக்கி நிறுத்துவதற்காக இந்த படத்தில் ஒரு வெயிட் ரோலில் பர்பாமென்ஸ் கொடுத்து வருகிறாராம் தம்பிராமைய்யா.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions