குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் தாயார் மறைவு!

Bookmark and Share

குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் தாயார் மறைவு!

‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. தற்போது படங்களை இயக்குவதை  விட்டுவிட்டு முழுநேர நடிகராக உருமாறியுள்ளார். நிறைய படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

தம்பி ராமையாவின் தாயார் பாப்பம்மாள், வயது 74. மதுரையில் வசித்துவந்த பாப்பம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு  உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை  பலனளிக்காமல் நேற்று அவரது உயிர் பிரிந்தது. 

மறைந்த பாப்பம்மாளின் இறுதிச்சடங்கு தம்பி ராமையாவின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள ராஜராஜபுரத்தில் நடைபெறுகிறது.  தம்பி ராமையாவின் தாயார் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து  வருகின்றனர். 

தம்பி ராமையா நடிப்பில் தற்போது ‘இருமுகன்’ படம் தயாராக இருக்கிறது. மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions