கதாநாயகனாக அறிமுகமாகும் தம்பிராமையாவின் மகன்

Bookmark and Share

கதாநாயகனாக அறிமுகமாகும் தம்பிராமையாவின் மகன்

தமிழ் சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் தம்பி ராமையா. இவருடைய மகன் உமாபதி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகான அறிமுகமாகியுள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். 

இப்படத்தை இன்பசேகர் என்பவர் இயக்கியுள்ளார். இவர் சின்னத்திரையில் நிறைய தொடர்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் உமாபதிக்கு ஜோடியாக ரேஷ்மா ரத்தோர் நடிக்கிறார். தெலுங்கில் பிரபல கதாநாயகியான இவர், தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். 

மேலும், இப்படத்தில் கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறாராம். ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 

இப்படம் குறித்து இயக்குனர் இன்பசேகர் கூறும்போது, இது எனக்கு முதல் படம். மக்கள் தியேட்டர்களுக்கு சென்று ஜாலியாக ஒரு படம் பார்க்கும் வகையில் ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதன்படி, இப்படத்தை நகைச்சுவையோடு எடுத்துள்ளோம். 

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க புதுமுகம் தேவைப்பட்டது. அப்போது நடத்திய நேர்முக தேர்வில்தான் உமாபதியை தேர்ந்தெடுத்தோம். அப்போது எங்களுக்கு அவர் தம்பி ராமையாவின் மகன் என்று தெரியாது. அவரை தேர்வு செய்தபிறகுதான் உமாபதி, தம்பிராமையாவின் மகன் என்று தெரியும். பின்னர், உமாபதி தனது அப்பாவிடம் சென்று இந்த கதையை பற்றி கூறினார். அவருக்கும் பிடித்துப்போனது என்று கூறினார். 

இப்படம் முழுக்க சென்னையிலேயே படமாக்கப்படவுள்ளது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 4 பாடல்களுக்கும் டி.இமான் இசையமைத்துள்ளார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ரமேஷ்குமார் தயாரித்துள்ளார். விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர்.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions