தம்பி ராமைய்யாவை மாற்றிய அப்பா வேடம்!

Bookmark and Share

தம்பி ராமைய்யாவை மாற்றிய அப்பா வேடம்!

தம்பி ராமைய்யா வெறும் காமெடியனாக மட்டுமே கருதி வந்தவர் பின் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் நடித்து நல்லதொரு குணசித்ர நடிகராக்கி விட்டார். மேலும் மைனா படத்தில் போலீசாக நடித்து தேசிய விருது பெற்றவர்.

அந்த வகையில், தற்போது தம்பி ராமைய்யா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கமர்சியல் நடிகராகிவிட்டார்.

அதேசமயம், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிறகுதான் நான் ஹீரோக்களுக்கு அப்பாவாக நடிப்பேன். அதுவரை கேரக்டர் ரோல்களில்தான் நடிப்பேன் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். 

சமீபத்தில் திரைக்கு வந்த தனி ஒருவன் படத்தில் வில்லன் அரவிந்த்சாமியின் அப்பாவாக நடித்திருந்தார். கதைப்படி அவர்களது காம்பினேசன் பெரிய அளவில் ஒர்க் அவுட்டாகி தியேட்டர்களில் பலத்த கைதட்டல் பெற்று வருகிறது.

இதுபற்றி தம்பி ராமைய்யா,“இந்த படத்தின் கதையை சொல்ல டைரக்டர் ராஜா அழைத்தபோது, முதலில் ஜெயம்ரவிக்கு அப்பாவாக நடிக்கத்தான் கதை சொல்கிறாரோ என்று நினைத்தேன்.

ஆனால், பின்னர் அது வில்லன் அரவிந்த்சாமிக்கு அப்பா என்பது தெரியவந்தது. அதோடு அந்த கேரக்டருக்கும் படத்தில் வேலை இருந்தது. அதனால்தான் யோசிக்காமல் ஒத்துக்கொண்டேன்.

மேலும், நான் சின்ன வயதில் இருந்தே எம்ஜிஆர், சிவாஜியின் ரசிகன். இப்போதும் அவர்கள் நடித்த படங்களைத்தான் தியேட்டருக்கு சென்று பார்ப்பேன். அதேசமயம், தனிஒருவன் படம் எனது பார்வையில் வித்தியாசமானதாக தெரிந்தது.

அதனால் எனது மனைவியுடன் தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அப்போது ரசிகர்கள் கொடுக்கிற கைதட்டல் ஒரு கலைஞனாய் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. எனவே இந்த மாதிரி வித்தியாசமான அப்பா வேடங்கள் இப்போதும் கூட நடிப்பேன்” என்கிறார் தம்பிராமைய்யா.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions