சுயசரிதை எழுதுகிறார் தம்பி ராமய்யா

Bookmark and Share

சுயசரிதை எழுதுகிறார் தம்பி ராமய்யா

திரைப்படங்களுக்கு நகைச்சுவை எழுத்தாளராக அறிமுகமான தம்பி ராமய்யா அதன் பிறகு நகைச்சுவை நடிகரானார். வடிவேலு குழுவில் இருந்த அவர், பின்னர் அவரை வைத்தே இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தை இயக்கினார்.

அதன் பிறகு ஒரு கூடை முத்தம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் மைனா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படம் அவரை தேசிய விருது வரைக்கும் கொண்டு சென்றதும், முழுநேர நடிகராகி விட்டார்.

தற்போது குணசித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடிப்படையில் எழுத்தாளரான தம்பி ராமய்யா தன் வாழ்க்கை அனுபவங்களை அனுபவ முகடுகள் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். விரைவில் அதனை புத்தகமாக வெளியிட இருக்கிறார். அதோடு ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

அதற்கான கதையையும் எழுதி முடித்து விட்டார். இசைஞானமும் உள்ள தம்பி ராமய்யா தான் இயக்கும் படத்துக்கு பாடல்கள் எழுதி இசை அமைக்கவும் முடிவு செய்திருக்கிறார். 


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions