எனர்ஜியுடன் என்ட்ரியாகும் தம்பி ராமைய்யா!

Bookmark and Share

எனர்ஜியுடன் என்ட்ரியாகும் தம்பி ராமைய்யா!

மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் போன்ற படங்களை இயக்கியவர் தம்பி ராமைய்யா. அதையடுத்து ஒரு கூடை முத்தம் என்ற படத்தை இயக்கினார். அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

அதனால் டைரக்சனில் இருந்து விலகி நடிப்பில் முழுவீச்சாக இறங்கினார் அவர். அப்படி அவர் பல படங்களில் நடித்து வந்தபோது மைனா படத்தில் நடித்து சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதினை பெற்றார்.

அதன்பிறகு திரையுலகில் அவரது நடிப்புக்கு ஒரு மவுசு ஏற்பட்டது. அதோடு, அவருக்கு முக்கியமான வேடங்களாக கொடுத்த இயக்குனர்கள் சில படங்களில் தம்பி ராமைய்யாவுக்கு பாடலும் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது விஜய்யின் புலி உள்பட 10 படங்களுக்கு மேல் பிசியாக நடித்து வருகிறார் தம்பி ராமைய்யா. அந்த வகையில் இரவு ஒரு படம், பகல் இன்னொரு படம் என கால்சீட் கொடுத்து நடித்து வரும் தம்பி ராமைய்யா, எந்த படப்பிடிப்பு தளத்துக்கு எப்போது சென்றாலும், முழு எனர்ஜியுடன்தான் செல்கிறாராம்.

அதனால் அதுவரை ஸ்பாட்டுகளில் சோர்வாக இருக்கும் நடிகர்கள்கூட அவரைப்பார்த்ததும் உற்சாகமாகி விடுகிறார்களாம். குறிப்பாக, தற்போது 50 வயதை கடந்து விட்ட தம்பி ராமைய்யாவிடம் வெளிப்படும் இந்த உற்சாகம் மற்ற நடிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறதாம்.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions