ரயில் திருடர்களான தம்பி ராமைய்யா- சிங்கமுத்து!

Bookmark and Share

ரயில் திருடர்களான தம்பி ராமைய்யா- சிங்கமுத்து!

என் வழி தனி வழி படத்தை அடுத்து மலையாள டைரக்டர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே மீண்டும் நடித்து வரும் படம் வைகை எக்ஸ்பிரஸ். இது மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கிய ஒரு படத்தின் ரீமேக் ஆகும்.

என்றாலும் தமிழ் ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு சிலபல திருத்தங்களை செய்து படத்தை இயக்கி வருகிறார் அவர். மேலும். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முழுக்க முழுக்க நடக்கும் கதை என்பதால், ஒரு ரயில் செட்டை அமைத்து அதற்குள் ஒரு மாதமாக படமாக்கி வந்த ஷாஜி கைலாஷ் கடந்த சில தினங்களாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பகுதி மற்றும் அங்குள்ள ரயில்கள் வந்து நிற்பது போன்ற காட்சிகளை படமாக்கி வருகிறார்.

மற்றபடி, இது ரயில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பந்தப்பட்ட கதை என்றாலும், காமெடி வேண்டும் என்பதற்காக தம்பி ராமைய்யா, சிங்கமுத்து ஆகியோரை காமெடியன்களாக களமிறக்கியுள்ள இயக்குனர், அவர்களை ரயிலில் பயணிகளை ஏமாற்றி திருட்டுத்தொழில் செய்யும் வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்.

அந்த வகையில், பயணிகளிடம் பணம் திருடி அவர்கள் சிக்கிக்கொண்டு பரிதவிக்கும் காட்சிகள் படு காமெடியாக படமாக்கப்பட்டிருக்கிறதாம்.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions