அஜித் படத்துக்காக மகன் படத்தை இயக்க மறுத்த தம்பி ராமைய்யா!

Bookmark and Share

அஜித் படத்துக்காக மகன் படத்தை இயக்க மறுத்த தம்பி ராமைய்யா!

மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமைய்யா. ஆனால், அதையடுத்து படம் இயக்குவதை நிறுத்தி விட்டு நடிகராக உருவெடுத்தார்.

அப்போது மைனாவில் அவர் நடித்த வேடத்துக்கு சிறந்த குணசித்ர நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகராக மாறிய தம்பி ராமைய்யா. இப்போதைக்கு பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்க வேண்டும் என்று அவரை அணுகியபோது, தடாலடியாக மறுத்து விட்டாராம் தம்பி ராமைய்யா. காரணம் கேட்டபோது, இப்போது நான் நடிப்பில் ரொம்ப பிசியாக இருக்கிறேன்.

இந்த நேரத்தில் நான் மீண்டும் டைரக்டராக மாறினால், தொடர்ந்து சான்ஸ் கொடுத்து வருபவர்களே என்னை ஓரங்கட்டி விடுவார்கள். அதனால் மீண்டும் படம் இயக்கி என் நடிப்புக்கு இருக்கிற மார்க்கெட்டை இழக்க நான் தயாராகயில்லை என்று அந்த டைரக்சன் வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டாராம்.

மேலும், அந்த படத்தை இயக்க அவரை அழைத்தபோது, அவர் அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தாராம். அதனால் இது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு.

அதனால் எக்காரணம் கொண்டு இயக்குனர் வாய்ப்புக்காக அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பினை இழக்க நான் தயாராக இல்லை என்றும் அடித்து சொன்னாராம் தம்பி ராமைய்யா. அந்த அளவுக்கு டைரக்சனை கெட்ட கனவாக மறந்து விட்டு, முழுநேர நடிகராகியிருக்கிறார் தம்பி ராமைய்யா.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions