ஒரு தேசிய விருதும், இரண்டு நடிகர்களும்...!

Bookmark and Share

ஒரு தேசிய விருதும், இரண்டு நடிகர்களும்...!

தமிழ் சினிமா சரித்திரத்தில் யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அடுத்தடுத்த வருடங்களில் நடந்தது. மைனா படத்தில் நடித்தற்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

அடுத்த ஆண்டு அழகர் சாமியின் குதிரை படத்தில் நடித்தற்காக அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தேசிய விருதுக்கு பிறகு இருவரின் வாழ்க்கையும் வெவ்வேறு விதமாக அமைந்தது. வடிவேலுவுடன் காமெடி கேரக்டரில் நடித்து வந்த தம்பி ராமையான இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்து அந்த தயாரிப்பாளருக்கு பெரும் தோல்வியை கொடுத்துவிட்டு ஒதுங்கி இருந்தவர்.

ஆனால் தேசிய விருதுக்கு பிறகு அவர் நிலைமை தலைகீழானது. அவர் நடிக்காத படமே இல்லை என்கிற அளவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளம் என்ற கேட்டு வாங்கும் நிலைக்கு உயர்ந்தார்.

தொடர்ந்து அந்த நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்புக்குட்டிக்கு அப்படி அமையவில்லை. தேசிய விருதுக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த மன்னாரு படம் வெற்றி பெறாதது அவருக்கு பெரிய சறுக்கலை உண்டாக்கியது. ஹீரோ சரிப்பட்டு வராது என்று மீண்டும் காமெடி, கேரக்டர் ரோலுக்கு வந்தார்.

ஆனாலும் அவரது சினிமா கேரியரில் எந்த மாற்றமும் இல்லை. குறைந்த சம்பளத்தில் சிறிய கேரக்டர் வாய்ப்புகளே வருகிறது. என்றாலும் அதனையும் விடாமல் அடுத்து ஒரு பிரேக்கிற்காக காத்திருக்கிறார்.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions