தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா

Bookmark and Share

தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா

2010ல் மிர்ச்சி சிவா நடிக்க சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த படம் தமிழ்படம். சுமார் 8 வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதிலும் சிவா தான் ஹீரோ சி.எஸ்.அமுதன் தான் இயக்குனர். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் சினிமா முழுவதையும் கலாய்த்துள்ளனர்.

சொல்ல போனால் இதில் ஒருபடி மேல போய் அரசியல் மட்டுமில்லாமல் தற்சமயம் நடக்கும் விஷயங்களையும் சேர்த்துள்ளனர். யு சான்றை வாங்கிய படக்குழு 12 தேதி படம் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டு தினம் ஒரு படத்தை கலாய்த்து போஸ்டரை வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பட வெளியீட்டு குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். ரிலிஸாகும் அத்தனை படமும் அந்த அமைப்பில் ஒப்புதல் வாங்க வேண்டுமாம்.

ஆனால் தமிழ்படம் 2விற்கு இன்னும் அந்த அமைப்பு ஒப்புதலை அளிக்கவில்லையாம். இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்படகுழு ரிலிஸ் தேதியை அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்படம்2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பஞ்சாயத்து தான் தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது நடைப்பெற்று வருகிறதாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions