தங்கமகன் திரைப்படம் கனடாவில் விசமிகளால் தடை!

Bookmark and Share

தங்கமகன் திரைப்படம் கனடாவில் விசமிகளால் தடை!

கனடாவில் Scarborough மற்றும் Mississauga வில் உள்ள தங்கமகன் திரைப்படம் திரையிடப்பட்ட Cineplex திரையரங்க வெண்திரைகள்  விசமிகளால் கிழிக்கப்பட்டது?  நேற்று (Dec 18, 2015) மாலை 7 மணி காட்சி மற்றும் நள்ளிரவு காட்சிகளின் போதே இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம் திரைப்பட காட்சிகளை நிரந்தரமாக நிறுத்திவிட்டது.  இதனால் தங்கமகன் காட்சிகள் முற்றாக டொரோண்டோ மாநகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் தங்கமகன் திரைப்படம் வேறு திரையரங்கில் திரைப்படுமென தங்கமகன் திரைப்பட விநியோகத்தினர் தமிழ் ஸ்டார் க்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

கடந்த அக்டோபர் 2015 இலும் இத்திரையரங்குகளில் புலி திரைப்பட காட்சிகளின்போது இதேபோல் திரையரங்க வெண்திரைகள்  விசமிகளால் கிழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இதை செய்தார்கள் என்று இதுவரை தங்களுக்கு தெரியாதபோதும் கடந்த 25 ஆண்டுகளில் இந்த இரண்டு தமிழ் திரைப்படங்கள் தவிர்ந்த (புலி, தங்கமகன்) இது போன்றதொரு அசம்பாவிதம் தங்கள் திரையரங்கில் இதுவரை நடந்ததாக தனக்கு தெரியாது என Ontario Cineplex  நிர்வாக தலைவர் மார்க் அன்டேர்சன் தமிழ் ஸ்டார் க்கு தெரிவித்தார். 

இனிவரும் காலங்களில் தங்களுக்குள் இருக்கும் வியாபாரப்போட்டிகளினால் ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை சம்பத்தப்பட்டவர்கள் உணரவேண்டும் என்று கூறி தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.  

சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா ??

இதேவேளை இச்சம்பவத்துக்கு அனிருத் இசையில் சமீபத்தில்   வெளிவந்த பீப் பாடல் தான் காரணம் என்றும், அனிருத் - தனுஷ் கூட்டணியே தனுஷ் படத்துக்கு இந்த நிலைமை என்றும் சமுகவலை தளத்தில் ஒரு குரூப் கோதாவில் குதித்திருக்கு. 

 


Post your comment

Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி
1 ரூபாய் கூட வாங்காமல் விஜய்காக நடிக்க தயார்: ஜெயம் ரவி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions