நவம்பர் 27 முதல் தங்கமகன் பாடல்கள்!

Bookmark and Share

நவம்பர் 27 முதல் தங்கமகன் பாடல்கள்!

தனது நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கமகன் படத்தின் பாடல்களை நவம்பர் 27 ம் தேதி வெளியிடவிருப்பதாக தனுஷ் தெரிவித்து இருக்கிறார். தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். வேலை இல்லாப் பட்டதாரி 2 என்று தலைப்பு வைக்கபட்டு பின்னர் தங்கமகனாக இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை நவம்பர் 27 ம் தேதியில் வெளியிடுவதாக தனுஷ் அறிவித்து இருக்கிறார். நவம்பர் 26 நள்ளிரவில் இப்படத்தின் பாடல்களை ஐடியூனில் கேட்டு மகிழலாம் என்று அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.

நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் தங்கமகன் படம் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் உதயநிதி ஸ்டாலின் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் கெத்து படமும் வெளியாகிறது. தங்கமகன், கெத்து 2 திரைப்படங்களிலும் நாயகியாக எமி ஜாக்சன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் தனது இசையால் ஷாக்கடிக்க வைத்த அனிருத், தங்கமகனில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்று காத்திருந்து பார்க்கலாம்.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
காஷ்டியூம் டிசைனர் பூர்த்தியை அழ வைத்த தனுஷ்
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்
ஆனந்த யாழை பாடல் மட்டும் இவ்வளவு சம்பாதித்ததா? வெளிவந்த தகவல், புதிய வியாபாரம்
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு
இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions