இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது தங்கமகன் டிரெய்லர்!

Bookmark and Share

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது தங்கமகன் டிரெய்லர்!

தனது நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கமகன் திரைப்படத்தின் டிரெய்லரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் 2 வது பாகமாக தங்கமகன் உருவாகி இருக்கிறது.

இப்படத்தை வருகின்ற 18ம் தேதி படக்குழுவினர் வெளியிடுகின்றனர். மேலும் இப்படத்தின் டிரெய்லரை இன்று மாலை 6 மணியளவில் வெளியிடுவதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். மழை, வெள்ளம் காரணமாக நிறையப் படங்கள் தள்ளிப்போன நிலையில் சொன்ன தேதியில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படத்தை வெளியிடுகிறார் தனுஷ்.

தெலுங்கில் இப்படம் நவ மன்மதடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு சுமார் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் இப்படத்தை 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தங்கமகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

தங்கமகனில் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் தனுஷும், ஆரண்யாவாக நடிகை சமந்தாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
காஷ்டியூம் டிசைனர் பூர்த்தியை அழ வைத்த தனுஷ்
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்
ஆனந்த யாழை பாடல் மட்டும் இவ்வளவு சம்பாதித்ததா? வெளிவந்த தகவல், புதிய வியாபாரம்
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு
இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions