தங்க மகன் படத்தில் ஆபாசம்! பொங்கும் பால் முகவர் சங்கம்

Bookmark and Share

தங்க மகன் படத்தில்  ஆபாசம்! பொங்கும் பால் முகவர் சங்கம்

சமீபத்தில் வெளியாகியுள்ள தங்க மகன் படத்தில் தனுஷ் ஆபாச வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளதாகவும், ஆபாசக் காட்சிகளை வைத்துள்ளதாகவும் பால் முகவர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பீப் பாடலுக்காக கண்டனம் தெரிவித்து, அந்தப் பாடலை உருவாக்கிய சிம்பு, அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர் பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமியும் மற்றும் அவர் மனைவியும்.

இந்த புகாரை விசாரிக்க கமிஷனர் அலுவலகத்துக்கு இருவரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் ஆபாச பாடல் குறித்தும், அதன் காரணமாக அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டது குறித்தும் விரிவாக கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.

அப்போது, சிம்புவையும் அனிருத்தையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மேலும் ஒரு புகாரையும் பதிவு செய்தனர் இருவரும்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்னுசாமி, சிம்பு, அனிருத் மீது சாதாரண பிரிவில்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். அவர் மேலும் கூறும்போது, ‘‘தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் பெண்களை காம பொருளாக சித்தரித்துள்ளார்.

சிம்பு, அனிருத் ஆகியோரின் பீப் பாடலில் இடம்பெற்ற ஆபாச வார்த்தை தங்க மகன் படத்திலும் இடம்பெற்றுள்ளது கண்டிக்கத்தக்கது," என்றார்.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
காஷ்டியூம் டிசைனர் பூர்த்தியை அழ வைத்த தனுஷ்
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்
ஆனந்த யாழை பாடல் மட்டும் இவ்வளவு சம்பாதித்ததா? வெளிவந்த தகவல், புதிய வியாபாரம்
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு
இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions