முள்ளும் மலரும் படம் பார்க்காதவர்கள் டைரக்டர்களே இல்லை! -தங்கர்பச்சான்

Bookmark and Share

முள்ளும் மலரும் படம் பார்க்காதவர்கள் டைரக்டர்களே இல்லை! -தங்கர்பச்சான்

மலைச்சாரல், மோகமுள், வான்மதி, காதல் கோட்டை, பாரதி என படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தங்கர்பச்சான், அழகி படத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

தொடர்ந்து சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி , களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கினார்.

இதில் பிரபுதேவா-பூமிகா ஜோடி சேர்ந்து நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதற்கான முயற்சிகளை பலமுறை எடுத்து தோற்று விட்ட தங்கர்பச்சான் அதையடுத்து படமே இயக்கவில்லை. ஆனால் சில சிறந்த படங்கள் குறித்த உரையாடலை சினிமா வட்டார நண்பர்களிடம் நடத்தி வருகிறார்.

அப்படி சினிமா குறித்து விவாதம் செய்யும்போது, யாராவது மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தை பார்க்கவில்லை என்று சொன்னால், நீங்களெல்லாம் டைரக்டராக தகுதியே இல்லாதவர்கள்.

முள்ளும் மலரும் படம் பார்க்காத யாரும் நல்ல படத்தை இயக்க முடியாது. அதனால் முதலில் அந்த படத்தைப் பார்த்து விட்டு எப்படி படம் இயக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சினிமாவுக்குள் வாருங்கள் என்று உதவி இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் தங்கர்பச்சான்.


Post your comment





Related News
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
தளபதி விஜயை இழிவாக விமர்சித்த பிரபல இயக்குனர், கொதிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
தமிழக அரசியல் கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தங்கர்பச்சான்
விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு
இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions