படித்த இளைஞர்கள் இருந்தும் சமுதாயம் சீரழிகிறது: தங்கர் பச்சான்

Bookmark and Share

 படித்த இளைஞர்கள் இருந்தும் சமுதாயம் சீரழிகிறது: தங்கர் பச்சான்

அருட்பணி பேரவை சார்பில் உலக முதியோர் தினவிழா நடந்தது. குழித்துறை மறை மாவட்ட முதன்மை பணியாளர் அருட்பணி மரிய அல்போன்ஸ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

வட்டார குருகுல முதல்வர் சகாயதாஸ் கொடி ஏற்றினார். சிலம்பை டென்னிசன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு பேசியதாவது:–

நான் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். 15–வது வயதில் சென்னைக்கு சென்று திரைப்பட துறையில் இணைந்து 35 ஆண்டுகள் பணி செய்து வருகிறேன். கணவன் இல்லாமல் மனைவி வாழலாம். ஆனால் மனைவி இல்லாமல் கணவனால் வாழ முடியாது என்பது நியதியாகும்.

வீடுகள் தோறும் பிள்ளைகளை வளர்த்த தாய் கஷ்டப்படும் தருவாயில் ஒவ்வொரு தாயின் சோகத்தில் வரலாறு உள்ளது. படித்தவர்களால் சமூகம் சீரழிகிறது. படித்தவர்கள் உறவுகளை மறக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு மூதாட்டி மரணமடைந்தபோது அவரது மகன் வெளிநாட்டிலிருந்து தொலைபேசியில் அவரது ஈமச்சடங்கினை வீடியோ எடுத்து அனுப்புங்கள் என்று உறவுகளிடம் கூறியது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படிக்காத ஏழை பிள்ளைகள்தான் குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டி தாய் தந்தையினரை பாதுகாத்து வருகின்றனர்.

படிக்காத பெரியார், எம்.ஜி.ஆர்., காமராஜர் போன்றவர்கள் நாட்டையே வழி நடத்தி செம்மையாக்கினர். ஆனால் இன்று படித்தவர்கள் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் அதிகம் பணம் சம்பாதிப்பதற்காகவே முன் வருகின்றனர். இதனால் உறவுகளை மறக்கின்றனர்.

படித்த இளைஞர்கள் பெரியவர்கள் சுயநலத்தை மறக்க வேண்டும், விட்டு கொடுத்து வாழ வேண்டும் என
இவ்வாறு அவர் பேசினார்.


Post your comment





Related News
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
தளபதி விஜயை இழிவாக விமர்சித்த பிரபல இயக்குனர், கொதிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
தமிழக அரசியல் கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தங்கர்பச்சான்
விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு
இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions