அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!

Bookmark and Share

அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!

என். டி. சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும்  'தங்கரதம் ' என்ற தமிழ் திரைப்படம் ஜுன் 16 ஆம் தேதியன்று வெளியாகிறது. இதனை தமிழகம் முழுவதும் சத்யம் சினிமாஸ் வெளியிடுகிறது.

இதில் வெற்றி, சௌந்தரராஜா, அதிதி கிருஷ்ணா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளு சபா சுவாமிநாதன், ராண்டில்யா, பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை அறிமுக இயக்குநர் பாலமுருகன் இயக்கியிருக்கிறார்.

ஆர் ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்ய, டோனி பிரிட்டோ என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். சி எம் வர்கீஸ் மற்றும் பினுராம் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.படத்தைப் பற்றி இயக்குநர் பாலமுருகன் பேசும் போது, இந்த படம் ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தையை பின்னணியாக கொண்டு தயாராகியிருக்கிறது.

இந்த சந்தைக்கு டெம்போவில் காய்கறிகளை ஏற்றி வரும் இரண்டு இளைஞர்களை சுற்றிப் பின்னப்பட்ட யதார்த்மான வாழ்வியல் கதை தான் இந்த படம். இந்த படத்திற்காக பரபரப்பாக காணப்படும் இந்த ஒட்டன் சத்திரம் சந்தையை ஏழு நாட்கள் யாரும் எதிர்பாராத வகையில் படமாக்கியிருக்கிறோம்.

இது தமிழ் சினிமாவிற்கு புதியதாக இருக்கும்.படத்தில் நாயகனாக வெற்றியும், மற்றொரு நாயகனாக சௌந்தரராஜாவும் நடித்திருக்கிறார்கள். சௌந்தரராஜாவின் தங்கையாக நகை அதிதி கிருஷ்ணா நடித்திருக்கிறார்.

காதல் காட்சிகளாகட்டும், ஏனைய காட்சிகளாகட்டும் எல்லாமே யதார்த்தம் மீறாத வகையிலேயே திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறேன். அதனால் தான் இதனை சிறப்பு காட்சியாக பார்த்த திரைக்கதை திலகம் கே பாக்யராஜ் அவர்கள் மனதார பாராட்டினார். இதை எனக்கு கிடைத்த கௌரவமாகவே கருதுகிறேன். கமர்சியலுக்காக எந்த சமரமும் செய்து கொள்ளவில்லை.

ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மனதில் வைத்து படம் தயாராகியிருக்கிறது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் படத்திற்கு யூ சான்றிதழ் கொடுத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

இதையும் ஒரு வெற்றியாகவே பார்க்கிறேன்.படத்தில் மலைச்சாமி என்ற கேரக்டரில் விவசாயியாகவும், எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரராகவும் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஒரு பாடல் காட்சியை வைத்திருக்கிறோம்.

அந்த பாடல் வரிகளை நான் எழுதியிருக்கிறேன். அந்த பாடல், படம் வெளியானவுடன் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். என்றார்.


Post your comment





Related News
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ் தேதிகள் இதோ- ரசிகர்கள் உற்சாகம்
முண்டாசுப்பட்டி திரைப்படம் ஜூன் 13-ல் ரிலீஸ்..!
குணமடைந்து வீடு திரும்பினார் மனோரமா..!
குளிர் தாங்காமல் கதாநாயகி மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் படப்பிடிப்பில் பரபரப்பு..!
ஃபெஃப்சி தலைவர் பதவியிலிருந்து அமீர் ராஜினாமா..?
கட் வாங்கமால் ‘யு’ சர்டிஃபிக்கெட் வாங்கிய \'பிரம்மன்\'..!
சுருதிஹாசன் எதிர்ப்பை மீறி படத்தை வெளியிடுவேன் டி டே தயாரிப்பாளர்..!
‘யு’ சர்டிபிகேட் கிடைத்த சந்தோஷத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படக்குழு..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions