நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!

Bookmark and Share

நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!

இன்றைய தேதியில் இளம் பெண்களின் கைகளில் இருக்கும் செல்போன்களில் ஸ்கிரீன் சேவரில் ஒளிரும் ஒரு சில ஆண்மகன்களில் இவருக்கும் இடமுண்டு. அதிலும் யாருமற்ற தனிமையில் இருக்கும் போது போனை ஆன் செய்து டச் ஸ்கிரீனில் இவரது தோற்றத்தை டச் செய்து கொண்டேயிருக்கும் ஏராளமான இளம் பெண்களை மால்களிலும் மல்டிப்ளெக்சிலும் காணலாம்.

அத்துடன் பல இளந் தலைமுறையினர் தங்களது ஃபேஸ்புக் ஐடியில் இவரது போட்டோவை வைத்துக் கொண்டு சாட்டிங்கில் ஈடுபடும் காட்சியையும் காணலாம். ஏராளமான சர்வதேச விளம்பரங்களில் தோன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் காந்த சிரிப்பால் கவர்ந்திருப்பவர் நடிகர் வெற்றி. அவர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கிறார். 

அவரிடம் படத்தைப் பற்றி கேட்கும் போது, ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தில் வில்லனாக நடித்தபோதே கதையின் நாயகனாக நடிக்கவேண்டும் என்ற எண்ணம் உதயமானது. நல்லதொரு கதைக்காக காத்திருந்தேன். அப்போது தான் ஒரு பொது நண்பர் மூலமாக இயக்குநர் பாலமுருகன் எனக்கு அறிமுகமானார். அவர் தங்கரதம் கதையைச் சொன்னபோது அதிலுள்ள ஜீவன் என்னை கவர்ந்தது.

அண்ணன் தங்கை உறவு குறித்த அவரது வாழ்வியல் அனுபவம் படத்தின் சிறப்பம்சமாக இருந்தது. அதன் பிறகு நான் கதையின் நாயகனாக நடிக்க இந்த கதையே பொருத்தமானது என்று எண்ணி, இவருடன் பயணிக்கத் தொடங்கினேன். இந்த கதைக்கான தயாரிப்பாளர் தேடலில் ஒரு வருடம் கரைந்தது. ஆனால் அதன் பிறகு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்கீஸ் அறிமுகமானார்.

அவர் இந்த கதையை தயாரிக்க முன்வந்தார். ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்தோம். படத்திற்காக ஒட்டன்சத்திரம் சந்தை, பழனி, வள்ளியூர், நாகர்கோவில் என பல இடங்களில் படபிடிப்பு நடைபெற்றது. கதாநாயகியாக நடிகை அதிதி கிருஷ்ணா நடித்தார். இயக்குநரிடம் எனக்கும் ஹீரோயினுக்கும் முத்தக் காட்சி உண்டா? என கேட்டேன். உங்களுக்கும் ஹீரோயினுக்கும் முத்தக்காட்சி உண்டு.

ஆனால் இந்த கதைக்கு தேவையில்லை’ என்று தெளிவாக கூறிவிட்டார். சற்றே வருத்தப்பட்டாலும், சண்டை காட்சிகளிலும், சேசிங் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. இனி தொடர்ந்து கதையின் நாயகனாக நடிப்பதா? இல்லையா? எனக் கேட்டால் எந்த கேரக்டராக இருந்தாலும் என்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தும் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

அதாவது நல்ல நடிகனாக வரவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஜுன் 16 ஆம் தேதியன்று வெளியாகும் ‘தங்கரதம் ’, என்னுடைய திரையுலக பயணத்தை நல்லபடியாக தொடங்கிவைக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.


Post your comment

Related News
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
குணமடைந்து வீடு திரும்பினார் மனோரமா..!
குளிர் தாங்காமல் கதாநாயகி மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் படப்பிடிப்பில் பரபரப்பு..!
ஃபெஃப்சி தலைவர் பதவியிலிருந்து அமீர் ராஜினாமா..?
கட் வாங்கமால் ‘யு’ சர்டிஃபிக்கெட் வாங்கிய \'பிரம்மன்\'..!
சுருதிஹாசன் எதிர்ப்பை மீறி படத்தை வெளியிடுவேன் டி டே தயாரிப்பாளர்..!
‘யு’ சர்டிபிகேட் கிடைத்த சந்தோஷத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படக்குழு..!
ஐங்கரன் பட நிறுவனத்திலிருந்து நடிகர் அருண் பாண்டியன் சத்தமில்லாமல் கழற்றிவிடப்பட்டார்..!
இந்தி நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் பரபரப்பு..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions