புதுமுகங்களை இயக்கும் ராட்டினம் தங்கசாமி!

Bookmark and Share

புதுமுகங்களை இயக்கும் ராட்டினம் தங்கசாமி!

ராட்டினம் படத்தை இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா தம்பி சத்யாவை வைத்து எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தை இயக்கினார். அதோடு அந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அவரே நடித்திருந்தார்.

மேலும், மதயானைக்கூட்டம் என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரித்த படமும் அந்த சமயத்தில் தயாராகி வந்தால், அந்த படம் வெளியாகும் நேரத்தில் தனது படத்தையும் வெளியிட்டால் இரண்டு படங்களின் டைட்டீலும் ஒரே மாதிரியாக இருப்பதால், ரசிகர்கள் குழம்பிப்போவார்கள் என்று சில மாத இடைவெளிக்குப்பிறகு தனது எட்டுத்திக்கும் மதயானை படத்தை வெளியிட்டார்.

ஆனால் முதல் படம் போன்று இரண்டாவது படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதோடு, படம் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாததால் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அந்த படத்தை வெளியிட்டார் தங்கசாமி.

இந்த நிலையில், மீண்டும் ராட்டினம் படத்தைப்போன்று புதுமுகங்களை வைத்து தனது அடுத்த படத்தை தொடங்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் அவர். இந்த படத்தில் 4 இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions