தனிஒருவன்-2 யோசனையில் மோகன் ராஜா?

Bookmark and Share

தனிஒருவன்-2 யோசனையில் மோகன் ராஜா?

அடுத்தவர்களின் கதையைத்தான் ரீமேக் செய்து வந்த டைரக்டர் மோகன்ராஜா கேரியரில் தனிஒருவன் முக்கியமான படம். தனி ஒருவனில்தான் சொந்தமாக ஒரு கதையை யோசித்து படமாக்கி மெகா ஹிட்டடித்தார். 

இப்போது இந்தி உள்பட பல மொழிகளிலும் அந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. முன்னணி ஹீரோக்களே அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இதுவரை ரீமேக் செய்து வந்த மோகன்ராஜாவின் படத்தை ரீமேக் செய்ய இப்போது பலர் போட்டிபோடுகின்றனர்.

தனி ஒருவனில் சமூகத்தில் நடக்கும் தீமைகளை சாடி கதையை படமாக்கி, அவரது நியாயமான கோபத்துக்கு ரசிகர்களும் பலத்த வரவேற்பு கொடுத்ததால், இனிமேல் இதுபோன்று சமூக பொறுப்புள்ள கதைகளை தொடர்ந்து படமாக்க அவர் முடிவு செய்துள்ளார். 

இந்த நிலையில், விஸ்வரூபம்-2, சிங்கம்-2, பில்லா-2 என பல ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவானது போன்று இப்போது மோகன்ராஜாவையும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்குமாறு அவரது நெருங்கியவர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். 

அதனால் இதுவரை அடுத்த சமூகத்தின் மீது தனக்கிருக்கும் கோபத்தையே படமாக்க அது தனி ஒருவன்-2 வாக இயக்கினால் என்ன என்று நினைக்கிறார் மோகன்ராஜா.

 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions