தனி ஒருவன் படத்தின் பாடல்கள் ஜூலை 15ம் தேதி ரிலீஸ்

Bookmark and Share

தனி ஒருவன் படத்தின் பாடல்கள் ஜூலை 15ம் தேதி ரிலீஸ்

ரோமியோ ஜூலியட் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி தற்போது நடித்துள்ள படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார்.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆதி இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை ஜூலை 15ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

ஜெயம் ரவி மற்றும் ராஜா கூட்டணியில் ‘ஜெயம்’, ‘எம்.குமரன்’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’ ஆகிய படங்கள் வெற்றியடைந்தது. அந்த வரிசையில் ‘தனி ஒருவன்’ படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions