தனி ஒருவன் படமே என்னை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது: பஹத் பாசில்

Bookmark and Share

தனி ஒருவன் படமே என்னை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது: பஹத் பாசில்

மலையாள திரை உலகில் இருந்து தமிழ் திரைக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருக்கு தமிழில் கிடைத்த வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் இங்கு வரக் காரணமாகி கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில், மற்றொரு மலையாள நடிகரான பஹத் பாசிலும் தற்போது மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார் பாஹாத் பாசில்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழ் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு. அதிலும் 'தனி ஒருவன்' படம் பார்த்தப் பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன் என சொல்லலாம். நேர்த்தியான இயக்கம், அருமையான காட்சி அமைப்பு என்று ஒருங்கிணைக்க பெற்ற இயக்குனர் மோகன் ராஜாவின் உழைப்பு என்னை பொறுத்தவரை மேல் நாட்டு இயக்குனர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன். 

இப்பொழுது அவர் படத்தின் மூலம் நான் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு மட்டற்ற பெருமை. மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானதும்கூட. என்னுடைய கதாபாத்திரம் தமிழ் திரை உலகில் நீங்கா இடம் பிடித்து நீடிக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார். 

இப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions