தனி ஒருவனில் நயன்தாரா ஏன்?: இயக்குனர் மோகன்ராஜா விளக்கம்

Bookmark and Share

தனி ஒருவனில் நயன்தாரா ஏன்?: இயக்குனர் மோகன்ராஜா விளக்கம்

ஜெயம்ராஜா தன் பெயரை மோகன்ராஜா என்று மாற்றிக் கொண்டு இயக்கும் படம் தனி ஒருவன். ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. படத்தை பற்றி இயக்குனர் மோகன்ராஜா கூறியதாவது: தனி ஒருவன் பக்கா கமர்ஷியல், ஆக்ஷன், ரொமாண்டிக், எண்டர்டெய்னர் படம்.

ஜெயம் ரவி முதன் முறையாக ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ் உத்தமன் ஆகியோரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். அரவிந்த்சாமி கேரக்டர் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. ரவியுடன் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்பது எது நீண்ட நாள் ஆசை.

மற்ற இயக்குனர்கள் அதைச் செய்வார்கள் என்று காத்திருந்தேன். தனி ஒருவன் கதை அவர் நடிப்பதற்கான பொருத்தமான கதை என்பதால் அதனை நானே செய்து விட்டேன்.

ரவியுடன் எந்த ஹீரோயின் நடித்தாலும் மேட் ஃபார் ஈச் அதர் லெவலில் இருப்பார்கள். இந்தப் படத்தில் ரவி, நயன் காமினேஷன் டபுள் மடங்காக இருக்கும். சென்னை, புதுச்சேரி, பெங்களூர், ஐதராபாத், கோவா, டேராடூன், பாங்காக்கில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் படம் வெளிவருகிறது.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions