'தனியொருவன்' டப்பிங் ஆரம்பம்

Bookmark and Share

'தனியொருவன்' டப்பிங் ஆரம்பம்

'ஜெயம்' ராஜா இயக்கத்தில், 'ஜெயம்' ரவி, நயன்தாரா மற்றும் பலர் நடித்து வரும் 'தனியொருவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

'ஜெயம்' ராஜா கடைசியாக இயக்கி வெளிவந்த படம் 'வேலாயுதம்'. விஜய் நடித்த இந்தப் படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. 'தனியொருவன்' படம் 2013ம் ஆண்டு கடைசியில் ஆரம்பமானது.

பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டு, ஒரு வழியாக சில வாரங்களுக்கு முன்புதான் படப்பிடிப்பை முடித்துள்ளனர். 'வேலாயுதம்' படம் வரை தொடர்ந்து ரீமேக் படங்களையே இயக்கி வந்த இயக்குனர் ராஜா, முதன் முறையாக சொந்தமாக கதை எழுதிய படம்தான் 'தனியொருவன்'.

இந்தப் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நயன்தாரா காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. ஜெயம் ரவியும், நயன்தாராவும் முதன் முறையாக ஜோடி சேரும் படம் இது.

ஹிப்ஹாப் தமிழா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. ஜுன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

'ஜெயம்' ரவி நாயகனாக நடித்த 'பூலோகம்' படம் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி பல மாதங்கள் ஆகிறது. வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட பின்னும் சில பிரச்னைகள், வழக்கு என அந்தப் படம் வெளிவராமலே உள்ளது. ரவி தற்போது ''ரோமியோ ஜுலியட், அப்பா டக்கர்,” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!
இன்று தமிழ் நாட்டுக்கே பெருமை சேர்த்த ‘தனி ஒருவன்’ நாள்!
தனி ஒருவன் படமே என்னை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது: பஹத் பாசில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions