'தனியொருவன்' -ஐ இழுத்தடிக்கும் ராஜா

Bookmark and Share

'தனியொருவன்' -ஐ இழுத்தடிக்கும் ராஜா

'ஜெயம்' படத்தின் மூலம் அண்ணன் ராஜா இயக்குனராகவும், தம்பி ரவி நாயகனாகவும் அறிமுகமானார்கள். அந்தப் படத்தின் எதிர்பாராத பெரிய வெற்றி அண்ணன் தம்பி இருவருக்குமே 'ஜெயம்' என அவர்கள் பெயருக்கு முன்னால் போடப்படும் ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அண்ணன் இயக்க, தம்பி நடிக்க 'தனியொருவன்' என்ற படம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டு ஆரம்பமானது.

இதுவரை ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்த ராஜா முதல் முறையாக சொந்தமாகக் கதை எழுதி உருவாக்கும் படம் என்பதாலோ என்னவோ இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாக நடந்து தாமதமாகவே முடிவடைய உள்ளது.

கதையை எழுதி விட்டாலும் திரைக்கதையை முழுமையாக ராஜா உருவாக்காமல் போனதே படத்தின் தாமதத்திற்கு முக்கிய காரணமாம். அது மட்டுமல்ல இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் ஜெயம் ரவி நான் கைந்து படங்களில் நடிக்கவும் ஒத்துக் கொண்டாராம்.

அந்தப் படங்களின் படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த தயாரிப்பாளரும், இயக்குனரும் தயாராக இருந்ததால் அண்ணன் படத்தை அம்போ என்று விட்டு விட்டுப் போய்விட்டாராம்.

இப்போது ஜெயம் ரவி நடித்துள்ள 'ரோமியோ ஜுலியட்' படம் முடிந்து ரிலீசுக்கும் தயாராகி விட்டது. ஆனால், அதற்கு முன்பு ஆரம்பமான 'தனியொருவன்' இன்னும் படப்பிடிப்பே முடியாமல் இருக்கிறது.

இன்னும் பாடல் காட்சிகளைப் படமாக்க வெளிநாடு போயே தீர வேண்டும் என்று ராஜா அடம் பிடிக்கிறாராம். ஏற்கெனவே, ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' படம் பல மாதங்களாக பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது.

அண்ணன், தம்பி இருவருமே ஒரு தயாரிப்பாளரின் மகன்களாக இருந்தும் இப்படி இருக்கிறார்களே என கோலிவுட்டில் சிலர் புலம்புகிறார்களாம்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions