தனி ஒருவன் ரீமேக்கை எதிர்பார்க்கும் சல்மான்கான்

Bookmark and Share

தனி ஒருவன் ரீமேக்கை எதிர்பார்க்கும் சல்மான்கான்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி–நயன்தாரா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘தனி ஒருவன்’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தெலுங்கு, இந்தி தயாரிப்பாளர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மோகன் ராஜ இதுவரை 8 படங்கள் இயக்கி இருக்கிறார். இதில் 7 படங்கள் வேறு மொழி படங்களின் ‘ரீமேக்’. இதுபோல் ஜெயம்ரவி அவரது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் 6 படங்கள் நடித்துள்ளார். இதில் 5 படங்கள் ‘ரீமேக்’.

இப்போது முதல் முறையாக ராஜா கதை எழுதி இயக்கியுள்ள ‘தனி ஒருவன்’ படத்தை, ரீமேக் செய்ய தெலுங்கு, இந்தி பட உலகினர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
‘தனி ஒருவன்’ கதை பற்றி தெரிந்து கொண்ட இந்தி நடிகர் சல்மான்கான் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறார்.

இதற்காக இந்த படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்து உள்ளார். விரைவில் அவருக்கு இந்த படம் திரையிட்டு காட்டப்படுகிறது. அதன் பிறகு இதன் ரீமேக்கில் நடிப்பது குறித்து அறிவிப்பார் என தெரிகிறது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions