இந்தி, தெலுங்கில் உருவாகும் தனி ஒருவன்!

Bookmark and Share

இந்தி, தெலுங்கில் உருவாகும் தனி ஒருவன்!

தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கிய, ஜெயம், முதல் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி வரை அண்ணனது கூட்டணியில் இணைந்தார் ஜெயம் ரவி. 

இந்நிலையில், அவர்களது ஆறாவதாக இணைந்த தனி ஒருவன் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதுவரை ரீமேக் கதைகளாக மட்டும் இயக்கி வந்த மோகன்ராஜா முதன்முறையாக தனது சொந்த கதையில் இந்த படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். 

இந்த வெற்றியினால் அடுத்தடுத்து சொந்த கதைகளையே படமாக்கும் ஆர்வம் வந்துல்ளாது. மேலும், இந்த படத்தின் வெற்றியைப்பார்த்து ரீமேக் செய்வதில் இந்தி, தெலுங்கில் போட்டி ஆரம்பமாகிவிட்டது.

அதில் முதல்கட்டமாக இந்தி நடிகர் சல்மான்கான் தனிஒருவன் படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடிக்கப்போகிறாராம். அதேபோல், தனிஒருவனில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமியின் கேரக்டர் அபிசேக்பச்சனுக்கு பிடித்து விட்டதால் அந்த வேடத்தில் நடிக்க அவரும் தயாராகி விட்டாராம்.

எனவே விரைவில் தனி ஒருவன் இந்தி ரீமேக் தொடங்கும் என்கிறார்கள். 

இதற்கிடையே தெலுங்கில் அப்படத்தின் உரிமையை வாங்கியுள்ள நிறுவனமும் சில முன்னணி ஹீரோக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறது. ஆக, தான் நடித்த படம் அடுத்தடுத்து இந்தி, தெலுங்கில் ரீமேக் ஆவதால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜெயம்ரவி.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions