தமிழ் திரையுலகத்தினர் நாளை உண்ணாவிரதம்

Bookmark and Share

தமிழ் திரையுலகத்தினர் நாளை உண்ணாவிரதம்

தியேட்டர்களில் படம் வெளியிட, நவீன புரொஜக்டர் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துள்ள, கியூப் மற்றும் யு.எப்.ஓ., நிறுவனங்களை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில், வரும் 10ம் தேதி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

இதுகுறித்து, சென்னையில் நேற்று, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கூறியதாவது: கியூப் மற்றும் யு.எப்.ஓ., டிஜிட்டல் நிறுவனங்கள், தயாரிப்பாளர்களிடம் கோடி கோடியாய் வசூலித்து, திரையுலகத்தை கபளீகரம் செய்கின்றன.

இந்த நிறுவனங்கள் விளம்பரம் மூலம், ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றன. இதில், தயாரிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட சதவீத தொகையை, கொடுப்பதில்லை.

இந்த நிறுவனங்கள், தியேட்டர்களில் படம் திரையிட, ஒரு காட்சிக்கு, 325 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது என, பொய் கூறுகின்றன; ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன.

இப்பிரச்னையில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், வரும் 10ம் தேதி காலை 10:00 மணியில் இருந்து, மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

இதில், திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அனைத்து சினிமா சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்பர். இவ்வாறு, அவர் கூறினார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
வறுமையில் வாடும் பி.எஸ்.வீரப்பாவின் மகனுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கலைப்புலி எஸ்.தாணு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions