தாரை தப்பட்டையைத் தொடர்ந்து புதுமுகங்களை இயக்கும் பாலா!

Bookmark and Share

தாரை தப்பட்டையைத் தொடர்ந்து புதுமுகங்களை இயக்கும் பாலா!

'தாரை தப்பட்டை' படத்துக்குப் பின் வேல ராமமூர்த்தியின் 'குற்றப் பரம்பரை' கதையை படமாக எடுக்க பாலா திட்டமிட்டிருந்தார். ஆனால் 'குற்றப் பரம்பரை' கதை தொடர்பாக பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் விவகாரம் தொடர்பாக பாலா ''நான் குற்றப் பரம்பரை படத்தின் சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு என்னுடைய கற்பனை கலந்து படத்தின் திரைக்கதையை இயக்கவிருக்கிறேன்'' என்று விளக்கம் தெரிவித்தார்.

மேலும் ஆர்யா, ராணா, அதர்வா, அரவிந்த் சாமி, விஷால் ஆகியோரை வைத்து படத்தை இயக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து அப்படத்துக்கான முதற்கட்ட பணிகளையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில் புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க பாலா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்து விட்டு விஷால், ஆர்யா இணையும் படத்தை எடுப்பது பாலாவின் திட்டம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

'குற்றப் பரம்பரை' படத்துக்கு முந்திக்கொண்டு பூஜை போட்ட பாரதிராஜாவும் 'அலைகள் ஓய்வதில்லை 2' வது பாகத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions