தாய்லாந்து செல்லும் தாரை தப்பட்டை

Bookmark and Share

தாய்லாந்து செல்லும் தாரை தப்பட்டை

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கரகாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் என்பதால் இப்படத்திற்காக மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு இருவரும் நடித்து வருகிறார்கள். 

இப்படத்திற்கு பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா இசையமைக்கிறார். இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியிருக்கின்றனர். 

சென்னை துறைமுகம் பகுதியில் தற்போது படத்தின் சில காட்சிகளை படமாக்கி வருகின்றனர். அடுத்தக்கட்டமாக தாய்லாந்து தீவுகளில் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க செல்லவிருக்கின்றனர். அங்கு படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய பாடலை படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

தாய்லாந்து பயணத்தோடு படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிடும் என தெரிகிறது. எனவே, அடுத்தக்கட்டமாக படத்தின் பாடல்களை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

இசைஞானி இளையராஜாவுக்கு இது 1000-மாவது படம் என்பதால், அவரை பெருமைப்படுத்தும்விதமாக இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் ‘தாரை தப்பட்டை’ படம் வெளியாகும் என தெரிகிறது.


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions