தாரை தப்பட்டை - சத்தத்தையே காணோமே ?

Bookmark and Share

தாரை தப்பட்டை  - சத்தத்தையே காணோமே ?

இளையராஜாவின் 1000மாவது படம் என்ற பெருமையுடன் பாலா இயக்கத்தில் கடந்த வருடம் ஆரம்பமான படம்  தாரை தப்பட்டை .

சசிகுமார் தயாரித்து நாயகனாக நடிக்க அவருடைய ஜோடியக வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடிக்க தஞ்சாவூரில் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக ஆரம்பமானது. படப்பிடிப்பு நடைபெறும் தஞ்சாவூருக்கு இசையமைப்பாளர் சென்று படக்குழுவினரை வாழ்த்திய சம்பவங்கள் கூட நடைபெற்றது.

அதன் பிறகு இந்தப் படம் பற்றி எந்த சத்தத்தையும் காணவில்லை.  தாரை தப்பட்டை  என பெயரை வைத்துவிட்டு அடிக்கடி காது கிழியும் அளவிற்கு செய்திகள் வரவேண்டாமா ?.

இயக்குனர் பாலாவுக்கும் சில உதவி இயக்குனர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது என்ற தகவல் வதந்தியாக திரையுலகத்தில் பரவியது.

ஆனால், ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும் போது சசிகுமாருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு தரப்பில் தெரிவித்தார்கள்.

சசிகுமாருக்கு அப்படியே காயம் ஏற்பட்டிருந்தாலும் இந்நேரம் மொத்தமாக சரியாகிப் போயிருக்கும். இருந்தாலும்  அடுத்த கட்டப் படப்பிடிப்பு பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமலே இருக்கிறார்கள்.  

பாலாவும் தற்போது அவர் தயாரித்துள்ள  சண்டிவீரன்  படத்தின் வெளியீட்டில் மும்முரமாகிவிட்டார் என்கிறார்கள். பாலா இயக்கும் படம் என்றாலே சொன்ன நேரத்தில் முடியாது என்பதற்கு  தாரை தப்பட்டை  படத்தையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் திரையுலகத்தினர்.


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions