தாரை தப்பட்டை கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்

Bookmark and Share

தாரை தப்பட்டை கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்

இயக்குநர் பாலாவின்  தாரை தப்பட்டை படம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சசிகுமார், வரலட்சுமி தொடர்புடைய பாடல் காட்சிகளை அந்தமானில் படம்பிடித்து திரும்பிய படக்குழுவினர் பாண்டிச்சேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடித்தனர்.

தற்போது 3ம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.தஞ்சையில் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோதுதான் சசிகுமாரி கை எலும்பு முறிந்தது. அவர் சிறிது குணமானதும் மற்ற காட்சிகள் எடுக்கப்பட்டது.

இப்போது முழுதுமாக குணமடைந்து விட்டதால் நிறுத்தப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் மீண்டும் எடுக்கப்படுகிறது.  செப்டம்பர் முதல் வாரத்தில் தஞ்சையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

10 நாள் படபிடிப்புடன் படத்தின் படபிடிப்புப் பணிகள் முடிகிறது. பின்னணி இசை, டப்பிங் பணிகள் முடித்து படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். 


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions