பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!

Bookmark and Share

பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!

இளையராஜாவின் இசையமைப்பில் 1000மாவது படமாக வெளிவர உள்ள தாரை தப்பட்டை படத்தின் இசை வெளியாகியுள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக இளையராஜாவும், பாலாவும் இந்த இசை வெளியிட்டு  விழாவை பிரம்மாண்டமாக நடத்தவில்லை.

தாரை தப்பட்டை என்றாலே அடி கிழியட்டும் என்பார்கள். அந்த அளவிற்கு இந்த மண்ணின் இசையை மக்கள் ரசிக்கும் அளவிற்கு அடித்துத் தள்ளியிருக்கிறார் இளையராஜா. இசையமைப்பாளர் இளையராஜாவே இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். 

மோகன்ராஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். திருவாசகத்திலிருந்து ஒரு பாடலை எடுத்து அதற்கு இசையமைத்திருக்கிறார். இதில் திருவாசகப் பாடலான பாருருவாய... என்ற திருவாசகப் பாடலைக் கேட்கும் போது உருக்கி விடுகிறது. 

இடறினும்.. என்று இளையராஜா எழுதி சரத் பாடிய பாடலும் அந்த வரிசையில் இடம் பெறும் மற்றொரு பாடல்.நான் கடவுள் படத்தில் இடம் பெற்ற பிச்சைப் பாத்திரம்... பாடல் போல இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆட்டக்காரி மாமன் பொண்ணு... பாடல் கேட்கும் போதே ஆட வைக்கிறதென்றால், திரையில் பார்க்கும் போது என்ன செய்யும்..?. வதன வதன வடிவேலன்... பாடலும் ரசிகர்களை நிச்சயம் ஆட வைக்கும்.

இந்தப் பாடல்களை அதிகம் ரசிக்க வைப்பதற்கு மற்றுமொரு காரணம். தீம் மியூசிக்கில் கிழி கிழியென அதிரடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

 இப்படத்தின் பாடல்கள் வெளியானது முதலே இசை ரசிகர்கள் இளையராஜாவை மீண்டும் ஒரு முறை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!
பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions