பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?

Bookmark and Share

பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?

தற்போதைய சூழலில் தியேட்டர்கள் கிடைக்காமல்  ஏகப்பட்ட படங்கள் தயார்நிலையில் காத்திருக்கின்றன.  பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலோ பல படங்கள் படை எடுக்கின்றன. 

தகவலின்படி 2016 ஆம் வருட பொங்கலுக்கு பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் கதகளி, ஜெயம் ரவியின் மிருதன், சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், உதயநிதி தயாரித்து நடித்துள்ள கெத்து ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர். 

கடந்த வாரம் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கெத்து படத்தை பொங்கலன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.  பொங்கல் பந்தயத்தில் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை-2 படமும் இருந்தது. கடைசிநேரத்தில் பொங்கல்போட்டியிலிருந்து விலகி ஜனவரி 29க்கு தள்ளி வைக்கப்பட்டது. 

தமிழகத்தைப் பொருத்தவரை சுமார் 750 தியேட்டர்களே ரிலீஸ் சென்டர் என்று சொல்லத்தக்க தியேட்டர்களாக உள்ளன. பொங்கள் அன்று 5 படங்கள் வெளியானால் ஒரு படத்துக்கு 150 தியேட்டர்களே கிடைக்கும்.

150 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தால் போட்ட பணத்தை ஒரே வாரத்தில் எடுக்க முடியாது. எனவே எந்தெந்தெ படங்கள் வரும் என்று பார்ப்போம்.


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!
பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions