மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!

Bookmark and Share

மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!

இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 1000வது படம், பாலாவின் தாரை தப்பட்டை இசை சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரைலர் இப்போது வெளியாகியுள்ளது.

ட்ரைலர் பார்த்தவர்கள், மிரட்டலாக வந்திருப்பதாகவும் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும்படி உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆடியோ சிடியில் இடம்பெற்றுள்ள கடைசி தீம் மியூசிக்கை இந்த ட்ரைலருக்கு பயன்படுத்தியுள்ளார் பாலா. இந்த இசையோடு பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியிலும் ஆக்ரோஷம் கொப்பளிக்கிறது. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் பிதாமகன் க்ளைமாக்ஸ் பார்த்த போது இருந்த உணர்வைத் தருகின்றன.

இந்தப் படத்துக்கு சென்சார் குழு ஏ சான்று அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கலன்று உலகம் முழுவதும் வெளியாகிறது தாரை தப்பட்டை.


Post your comment





Related News
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!
தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்?
கைமாறியது தாரைதப்பட்டை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions