இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்: தருண்கோபி அறிவிப்பு

Bookmark and Share

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்: தருண்கோபி அறிவிப்பு

திமிரு, காளை படங்களை இயக்கியவர் தருண்கோபி. அதன் பிறகு நடிகராக அவதாரம் எடுத்தார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்தார். அது ஓரளவுக்கு ஒடியதும் தொடர்ந்து நடிகராக முடிவு செய்தார்.

சரவண குடில், பேச்சியக்கா மருமகன், கன்னியும் காளையும் செம காதல் படங்களில் நடித்தார் இந்தப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. தற்போது அவரே ஹீரோவாக நடித்து 'வெறி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை திமிரு படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்.

"இதற்கு பிறகு இனி நடிக்க மாட்டேன். நடிகனுக்கான தகுதி எனக்கு இல்லை" என்று தருண் கோபி கூறினார்.

படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நான் படம் இயக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன். படம் இயக்கத்தான் கற்றேன். இடையில் நடிப்பு ஆசை வந்து விட்டது. அதுதான் எனக்கு சறுக்கலாக அமைந்தது. நான் நடித்த படங்கள் அப்படி அப்படியே நிற்கிறது. இதனால் பல கஷ்டங்களை அனுபவித்தேன் என் குடும்பம் சிதைந்து விட்டது.

என் தந்தை காணாமல் போய்விட்டார். எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.  அந்த நேரத்தில்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் கிடைத்தார். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் இந்தப் படத்தை இயக்கினேன்.

படத்தை எடுத்து போட்டுப் பார்த்தபோதுதான் படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் வில்லனாக நடித்திருக்கும் ரமணாவின் ஆதிக்கம்தான் இருந்தது. நான் ஹீரோவாக கிளைமாக்சில்தான் வருகிறேன்.

அப்போதுதான் என்னுள் இருப்பது நடிகன் அல்ல இயக்குனர்தான் என்பதை புரிந்து கொண்டேன். அதனால் இனி எந்தக் காலத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். வெறிதான் நான் நடித்த கடைசி படமாக இருக்கும். என்றார்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!
நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்
'அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் இணைந்தார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions