தமிழில் ஒளிபரப்பாகிறது உலக புகழ் பெற்ற தொடர்

Bookmark and Share

தமிழில் ஒளிபரப்பாகிறது உலக புகழ் பெற்ற தொடர்

கொரியன் டிராமாக்களில் யூ ஆர் பியூட்டிபுலுக்கு அடுத்த புகழ்பெற்ற தொடர் தி ஹேர்ஸ். கொரியன் டிராமக்களின் நம்பர் ஒண் நடிகர் லீ மின் ஹோவும், நம்பர் ஒண் நடிகை பார்க் கின் இயும் இணைந்து நடித்த டிராமா.

உலகம் முழுவதும் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட தொடர் இது. அதோடு அமெரிக்க நிறுவனம் தயாரித்த முதல் கொரியன் தொடரும் இதுதான். தற்போது இந்தத் தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

வருகிற 23ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கொரியாவைச் சேர்ந்த பெரிய கோடீஸ்வரன் மகன் ஜேசன் அமெரிக்காவில் படிக்கிறார். அவருக்கு இன்னொரு கோடீஸ்வரரின் மகளை திருமணம் பேசி முடிக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜேசன் தன்னுடன் படிக்கும் ஏழை மாணவி ஜெனியை காதலிக்கிறார். படித்து முடித்து விட்டு இருவரும் நாடு திரும்பிய பிறகுதான் தெரிகிறது. ஜேனி சேசன் வீட்டு வேலைக்காரரின் மகள் என்பது.

இவர்கள் காதலை பிரிக்க கோடீஸ்வர குடும்பம் சதி செய்வதும். அதனை முறியடித்து இருவரும் காதலில் வெற்றி பெறுவதும்தான் கதை.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions