‘தி மார்ஷியன்’ ஹாலிவுட் படத்தை விண்வெளியில் இருந்தபடியே கண்டுகளித்த வீரர்கள்

Bookmark and Share

‘தி மார்ஷியன்’ ஹாலிவுட் படத்தை விண்வெளியில் இருந்தபடியே கண்டுகளித்த வீரர்கள்

உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் ஹாலிவுட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும்  ‘தி மார்ஷியன்’ என்ற பிரம்மாண்டமான ஹாலிவுட் படத்தை சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் கண்டுகளித்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பார்த்த விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி ட்விட்டரில், நேற்றிரவுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன், செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் எங்கள் பயணம் இன்று மீண்டும் தொடர்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

இதே போல் மற்றொரு விண்வெளி வீரரான லிண்ட்க்ரென்,  ‘தி மார்ஷியன்’ எங்கள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறது  என்று ட்வீட் செய்துள்ளார்.

‘கிராவிட்டி’ திரைப்படத்தை தாறுமாறாக ரசித்த ரசிகர்கள், செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொள்ளும் விண்வெளி வீரரைப் பற்றிய ‘தி மார்ஷியன்’ படத்தை தியேட்டரில் பார்க்க எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

இதே போன்றுதான் கிராவிட்டி படத்தையும் தியேட்டருக்கு வருவதற்கு முன்பாகவே விண்வெளி வீரர்கள் பார்த்தனர்.


Post your comment





Related News
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions