தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவை இல்லை

Bookmark and Share

தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவை இல்லை

சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, அமிதவராய் அடங்கிய அமர்வு சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும். அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணையில் அட்டார்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி, இந்த உத்தரவு தொடர்பான வழிகாட்டுமுறையை 10 நாட்களுக்குள் அனுப்புவதாகவும், மாற்றுத்திறனாளிகள் எப்படி மரியாதை செலுத்த முடியும் என்றும் கூறினார்.

அதற்கு நீதிபதிகள், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை. அதற்கு ஈடான வகையில் அவர்கள் உரிய மரியாதை செலுத்தினால் போதும் என்றனர். அதேபோல டெல்லியில் உள்ள தியேட்டரில் நடந்த விபத்தை டெல்லி மாநகராட்சி குறிப்பிட்டு இருந்தது.

அதன்படி தியேட்டரில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது கதவுகள் பூட்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் திருத்தம் செய்தனர். இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  


Post your comment





Related News
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
மெர்சலை நிராகரித்த பிரபல திரையரங்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
இனி எங்க தியேட்டரில் கோலா பானங்கள் கிடையாது- பிரபல திரையரங்கம் அதிரடி
தியேட்டர்களில் கபாலி படத்திற்கு அதிக கட்டணம் வசூல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
அனிருத்திற்கு காசி தியேட்டரில் பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!
விரைவில் தியேட்டர்ல 4 பேர்..!
நீண்ட நாட்களாக தள்ளி போகும் சேரன் இயக்கிய படம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions