சென்னை சர்வதேச குறும்பட விழாவில் ஜெர்மன் படத்துக்கு விருது

Bookmark and Share

சென்னை சர்வதேச குறும்பட விழாவில் ஜெர்மன் படத்துக்கு விருது

சென்னையில் 2வது சர்வதேச குறும்பட விழா, ரஷிய காலாச்சார மையத்தில் நடந்தது. இதில் குறும்படம், டாக்குமெண்டரி, அனிமேஷன் பிரிவில் 600க்கும்  மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.

இயக்குனர் மற்றும் எடிட்டர் பி.லெனின் தலைமையிலான நடுவர் குழு விருதுக்குரிய படங்களை தேர்ந்தெடுத்தது. அதன்படி சிறந்த குறும்படமாக ஜெர்மனைச் சேர்ந்த மார்டின் கிரிஸ்டோபர் போடே இயக்கிய குட் ஸ்டோரி என்ற படம் விருது பெற்றது.

இரண்டாவது இடம் இலங்கையை சேர்ந்த இளங்கோ ராமநாதன் இயக்கிய சைலண்ட் டேர்ஸ் என்ற படத்திற்கும், சிறப்பு ஜூரி விருது ஹங்கேரியன் படமான வால் படத்துக்கு கிடைத்தது.

சிறந்த டாக்குமெண்டரி படமாக இந்தியாவைச் சேர்ந்த அமித் சோனாவானே மற்றும் கவிதா டத்திர் இணைந்து இயக்கிய பாபய் படத்துக்கு கிடைத்தது. சிறந்த அனிமேஷன் குறும்படமாக செர்பியன் இயக்குனர் எமா சிம்மோனியா இயக்கிய பர்தா படத்துக்கு கிடைத்தது.

நேற்று (ஜன 22) நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழக அரசின் செய்திதுறை செயலாளர் எம்.ராஜாராம், வருமானவரித்துறை அதிகாரி டி.என்.கர், தெகிடி பட இயக்குனர் பி.ரமேஷ், நடிகை சைலஷா தத்துர், விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாச சந்தானம், இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions